Star1. எனது நட்சத்திர வாரம் பற்றி
தமிழில் வலை பதியத் தொடங்கி ஒரு மூன்றரை ஆண்டுகள் கழித்து தமிழ்மண நட்சத்திர அந்தஸ்து கிடைத்துள்ளது :) நட்சத்திர வாரத்தின்போது தினமும் ஒரு பதிவாவது இட வேண்டும் என்று எழுதப்படாத சட்டம் நிலவுவதும் தெரியும்!
என் இவ்வாரப் பதிவுகளில் ஸ்பெஷலாக எல்லாம் எதுவும் இருக்காது. எப்போதும் எழுதுவது போல எனக்கு நெருக்கமான விஷயங்களும், சில நிகழ்வுகள்/பிரச்சினைகள் குறித்த கண்ணோட்டமும் பதிவுகளில் காணப்படும். இந்த வாரம், அரசியல், சமூகம், ஆன்மீகம், தொழில்நுட்பம் என்று கலந்து கட்டி பதிவுகள் வரும். புதிய பதிவர்களுக்காக, கொஞ்சம் அரைத்த மாவையும் அரைக்க (மீள் பதிவுகள் இட) உத்தேசம்!
அறிவுஜீவித்தனமாக எதுவும் எழுத மாட்டேன்! (யாரும் பயப்படத் தேவையில்லை;-)) என்னிடம் இருக்கும் சரக்கை வைத்து ஜீவிக்க (சுவாசிக்க!) எல்லாம் முடியாது, ஏதோ ஜீவனம் தான் பண்ண முடிகிறது என்பதால் :) "மூத்த" (வயதில் அல்ல!) பதிவர் என்ற பட்டத்துக்கு பங்கம் வராதவாறு இந்த நட்சத்திர வாரத்தை ஒரு மாதிரி ஒப்பேற்றி விடவே உத்தேசம் :)
எனது இவ்வாரப் பதிவுகளுக்கு பின்னூட்டம் இட இயலாத வாசகர்கள், குறைந்தபட்சம் தமிழ்மணப் பட்டையில் உள்ள "+"ஐ அமுக்கி விட்டுச் செல்லவும் ?! ஏனெனில், "-"ஐ அமுக்குவதால் எந்தப் புண்ணியமும் இல்லை, எனது இவ்வாரப் பதிவுகளின் சுட்டிகளுக்கு (இந்த வாரம் முழுதும்) தமிழ்மணத்தின் முதல் மற்றும் நட்சத்திரப் பக்கங்களில் பிரதானமாக இடமளிக்கப்படும் காரணத்தால் ;-)
இவ்வார இறுதியில், எனது நட்சத்திர வாரம் எப்படி இருந்தது என்று ஒரு வாக்குப் பதிவு நடத்தவும் எண்ணம் உள்ளது, பார்க்கலாம்.
தமிழ்மணத்திற்கும், வாசகர்களுக்கும் நன்றி.
என்றென்றும் அன்புடன்
பாலா
31 மறுமொழிகள்:
வாருங்கள்;
வாழ்த்துக்கள்.
வாருங்கள்;
வாழ்த்துக்கள்.
நட்சத்திர வாழ்த்துக்கள் பாலா !
என்றும் அன்புடன்
கோவி.கண்ணன்
//, Last but not the Least, ரஜினியின் வேகமும், ஸ்டைலும்//
கண்டிப்பாக,நட்சத்திர வாரத்தில், இந்த பாதிப்பு இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன்
வணங்கி வரவேற்கிறேன்....!
நீங்கள் எப்போதோ நட்சத்திரமாக வந்திருக்க வேண்டியது. நீங்கள் அச்சமயம் ஒப்பவில்லை. ஆகவே இப்போதுதான் வருகிறீர்கள்.
வாழ்த்துக்கள்.
நான் ஏற்கனவே கூறியதுதான். எனது வலையுலப் பிரவேசத்தின் இன்ஸ்பிரேஷன் நீங்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நட்சத்திரப் பதிவருக்கு வாழ்த்துகள்..
valthugal!!!
வாழ்த்து(க்)கள் பாலா.
ஜொலிப்பு இருக்குதானே?
அதெல்லாம் நல்ல ஆரம்பம்தான்.
நல்ல வாரமாக அமையட்டும்.
நட்சத்திர வாழ்த்துக்கள் பாலா. நட்சத்திர வாரம் ரஜினி படங்கள் போல் விறுவிறுப்பாக போகும் என்று எதிர்பார்க்கிறேன்
:-)
வாழ்த்துக்கள்
நட்சத்திர வாழ்த்துக்கள்
நட்சத்திர வாழ்த்துக்கள் பாலா.
நட்சத்திர வாழ்த்துக்கள்!!! பாலா!!!
வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன்
புதுகைத் தென்றல்
அன்பான நண்பர்கள்
தருமி சார், கோவி.கண்ணன், ஆயில்யன், டோ ண்டு சார், பாசமலர், Gulf-tamilian, துளசி டீச்சர், முத்துகுமரன், முபாரக், வடுவூர் குமார், மதுரையம்பதி, வெயிலான்
ஆகியோருக்கு நன்றிகள் பல!
இன்று என் நட்சத்திர வாரம் தொடங்குவதில் ஒரு சுவாரசியமான coincidence இருக்கிறது ! இன்று தான் (டிசம்பர் 3) எனது 'தமிழ்' நட்சத்திர (உத்திரம்) பிறந்த நாள் !
'தமிழ் நட்சத்திர' பிறந்த தினத்தில், 'தமிழ்மணம் நட்சத்திரம்' அந்தஸ்து கிட்டியுள்ளது :)))))
எ.அ.பாலா
வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள் * & *
நட்சத்திர வாழ்த்துக்கள் பாலா !
பாலா,
இனிய பிறந்த நாளுடன், இணைந்த நட்சத்திர அந்தஸ்து - வாழ்க வளமுடன் - வாழ்த்துகள்
அன்புள்ள பாலா
இந்த வார நட்சத்திரமாக ஜொலிக்கப் போவதற்கு வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்.
புதுகைத் தென்றல், கிருத்திகா, இளா, சீனா, Delphine, சங்கர்
வாழ்த்துக்கு நன்றி.
l-l-d-a-s-u, மாயவரத்தான்,
Long time no see :) நன்றி.
எ.அ.பாலா
All the very best! :-)
அண்ணா, பிறந்த நாள் மற்றும் நட்சத்திர வாழ்த்துக்கள்.
உங்க நண்பரும் இந்த வாரம் வருவாரில்ல!!
வாழ்த்துக்கள் Bala.
ராம்கி, செல்வன்,
நன்றி.
கொத்ஸ்,
//அண்ணா, பிறந்த நாள் மற்றும் நட்சத்திர வாழ்த்துக்கள்.
உங்க நண்பரும் இந்த வாரம் வருவாரில்ல!!
//
நன்றி.
இதானே வேண்டாங்கறது :) கொத்ஸ் வரச் சொல்றாருன்னு நண்பர் கிட்ட சொன்னேன், வரமாட்டேன்னு ஒரே அடம் ;-)
எ.அ.பாலா
என்னுடைய கூகுள்ரீடரில் உங்க பதிவில் 8 புதுப் பதிவுன்னு காட்டினப்பவே நினைச்சேன் இதான் மேட்டரா இருக்கும்னு... வாழ்த்துக்கள் :-)
பாலா
வாழ்த்துக்கள்.
சேதுக்கரசி, மஞ்சூர் ராசா,
nanRi !
நட்சத்திர வாரத்தில் கலக்க வாழ்த்துக்கள்...
எல்லாருக்கும் பிடிச்ச அந்த "என்ன படம்??என்ன பாடல்" போட்டிப் பதிவுகளையும் இந்த வாரம் தந்தால் நல்லா இருக்கும்...
விண்மீன் வார வாழ்த்துகள் சீனியர். காலம் தாழ்த்திய பிறந்த நாள் வாழ்த்துகளும். நான் பங்குனி உத்திரம், நீங்கள் கார்த்திகை உத்திரமா?! :-)
ஒரு வாரம் சொந்த காரணங்களுக்காக தமிழ்மணம் பக்கம் வரமுடியவில்லை. அதனால் தான் தாமதம். வழக்கம் போல் உங்கள் எல்லா இடுகைகளையும் படிக்கிறேன். பின்னூட்டம் இட விரும்பும் இடுகைகளுக்கு இடுகிறேன். ஒவ்வொன்றாகப் படித்து வர கொஞ்சம் நாள் ஆகலாம்.
Post a Comment